ராக்கெட் தாக்குதல் - பலியான உயிர்கள்.. தாய்லாந்து - கம்போடியா இடையே பதற்றம்

x

Thailand Cambodia | துப்பாக்கி சூடு, ராக்கெட் தாக்குதல் - துடிதுடித்து பலியான உயிர்கள்.. தாய்லாந்து - கம்போடியா இடையே பதற்றம்

எல்லையில் மோதல் தொடர்வதால் தாய்லாந்து - கம்போடியா இடையே பதற்றம் நீடிக்கிறது. எல்லைப் பிரச்சினை காரணமாக இரு நாட்டு ராணுவத்தினரும் துப்பாக்கி சூடு மற்றும் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கம்போடியா ராணுவத்தினர் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. கம்போடியா ராணுவமும் தாய்லாந்து ராணுவம் மீது பரஸ்பரம் குற்றம்சாட்டி இருக்கிறது. இரு நாட்டு மோதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் எல்லைப் பகுதியை விட்டு வேறு இடத்திற்கு சென்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்