மெக்ஸிகோவின் மான்டெர்ரியில், AI உதவியுடன் இயங்கும் ரோபோ நாய் ஒன்று விலங்குகள் நலன் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. வால்டாக்(Waldog) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ நாய், ஆதரவற்ற விலங்குகளின் நலன் மற்றும் அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களோடு உரையாடுகிறது. மெக்ஸிகோ நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் வால்டூ ஃபெர்ணான்டஸ் என்பவர், ரோபாவை வாங்கி விழிப்புணர்வுக்காக தெருக்களில் உலாவிட வைத்துள்ளார்.