RIP Brigitte Bardot | பழம்பெரும் பிரெஞ்சு நடிகை பிரிஜிட் பார்டோட் காலமானார்
பிரபல பிரெஞ்சு நடிகையும், விலங்குகள் நல ஆர்வலருமான பிரிஜிட் பார்டோட் (Brigitte Bardot) தனது 91-வது வயதில் காலமானார். இதையடுத்து, செயின்ட் ட்ரோபஸ் நகரில் உள்ள அவரது சிலைக்கு ரசிகர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த 1956ஆம் ஆண்டு வெளியான "And God Created Woman" திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்த இவர், பிரெஞ்சு சினிமாவில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவராக கருதப்படுகிறார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக அவர் உயிரிழந்ததாக, அவரது பெயரில் இயங்கும் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
Next Story
