Resignation | France | பதவியேற்ற 27 நாட்களில் பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா
பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகோர்னு (Sebastien Lecornu) ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் 47வது பிரதமராக பதவியேற்ற 27 நாட்களில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு மேலும் நெருக்கடி கொடுத்துள்ளது. முன்னதாக தனது அமைச்சரவையை அறிவித்த 14 மணி நேரத்திற்குள் அவரது இந்த ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரான்சில் ஐந்து பிரதமர்கள் பதவி விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
