மீண்டும் மீண்டும் சிக்கல்... முடங்கிய `X' - பின்னணி என்ன..?

x

எக்ஸ் தளம் முடங்கியதால் பயனர்கள் அவதிக்குள்ளான நிலையில், டேட்டா சென்டர் செயலிழப்பால் சிக்கல்களைச் சந்தித்து வருவதாக எக்ஸ் தள நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான எக்ஸ் சமூகவலைதளம், வெள்ளிக்கிழமையைத் தொடர்ந்து சனிக்கிழமையும் முடங்கியது. எக்ஸ் வலைதளம், செயலி இரண்டும் முடங்கியதாக பயனர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், டேட்டா சென்டர் செயலிழப்பால் அவ்வப்போது சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், பிரச்னையை சரிசெய்ய முயற்சித்து வருவதாகவும் எக்ஸ் தள நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சில பயனர்களுக்கு உள்நுழைவு, பதிவு சேவைகள் கிடைக்கவில்லை என்றும், அறிவிப்புகள் மற்றும் பிரீமியம் அம்சங்களில் தாமதங்கள் ஏற்படலாம் என்றும், எக்ஸ் தளம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்