Rat | China | விண்வெளிக்கு சென்றுவந்த எலிக்கு 6 குட்டிகள்... சீன விஞ்ஞானிகள் செய்த சோதனை
Rat | China | விண்வெளிக்கு சென்றுவந்த எலிக்கு 6 குட்டிகள்... சீன விஞ்ஞானிகள் செய்த சோதனை
குட்டிகளை ஈன்ற விண்வெளிக்கு பயணித்த எலி - விஞ்ஞானிகள் சோதனை
சீன விண்வெளி நிலையத்துக்கு 4 எலிகள சோதனைக்காக அனுப்புனாங்க...
2 வாரங்கள் அங்க தங்கிருந்த எலிகள் பாதுகாப்பா பூமிக்கு திரும்பிருச்சுங்க..
திரும்பி வந்ததுக்கப்றம் ஒரு பெண் எலி கர்ப்பமாகி 9 குட்டிகள் போச்சு... அதுல 6 குட்டிகள் உயிர் பிழைச்சது... தாயும் சேய்களும் நலம்...
விண்வெளிக்கு போயிட்டு வந்ததால அதுங்க உடம்புல எந்தவித மாற்றமும் இல்ல...
ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் வித்தியாசமா இருந்துருக்கு... அதாவது விண்வெளிக்கு போயிட்டு வந்த அந்த எலி ரொம்ப முன்னெச்சரிக்கையோட நடந்துக்குச்சாம்... குட்டி போடுறதுக்கு ரொம்ப தனியான மறைவான இடத்த தேர்ந்தெடுத்துச்சாம்...
இந்த சோதனை விண்வெளில மனிதர்கள் தொடர்பான ஆராய்ச்சிக்கு பெரும் உதவியா இருக்கும்னு விஞ்ஞானிகள் கருதுறாங்க...
