நியூயார்க்கில் கிராண்ட் மார்ஷல்களாக பவனி வந்த ராஷ்மிகா - தேவரகொண்டா
இந்திய தின அணிவகுப்பில் பங்கேற்ற ராஷ்மிகா-தேவரகொண்டா
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த இந்திய தின அணிவகுப்பில் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோர் பங்கேற்றனர். விக்சித் பாரத் 2047 என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்திய தின அணிவகுப்பில் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோர், கிராண்ட் மார்ஷல்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக நியூயார்க் இஸ்கான் சார்பில் ரத யாத்திரை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
