"குண்டுவெடிப்பு குறித்து தொடர் விசாரணை" - இலங்கை பிரதமர் ரணில் தகவல்

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 200 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
"குண்டுவெடிப்பு குறித்து தொடர் விசாரணை" - இலங்கை பிரதமர் ரணில் தகவல்
Published on
இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஈஸ்டர் தின தாக்குதலில் தொடர்புடைய உயிருடன் உள்ள அனைவரும் சிறையில் இருப்பதாக கூறினார். தாக்குதல் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,கைதோடு இந்த விசாரணையை கைவிடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதனிடையே, ஐ.எஸ் தீவிரவாதிகள் தான் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தினார்கள் என்பதை நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை புலனாய்வு துறை தெரிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்ற தேர்வுக்குழு முன்பு ஆஜராகி சாட்சியமளித்த புலனாய்வு பிரிவு தலைவர் ரவி செனவிரத்ன, இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவர், இந்தோனேசியாவில் உள்ள மூன்றாம் தரப்பினருக்கு, ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தலைவருக்கு தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் ரவி செனவிரத்ன கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com