Ramanathan Archchuna | துப்பாக்கியை காட்டி மிரட்டிய எம்பி.. அசராமல் நின்று சண்டை செய்த பெண்கள்
நிலத்தகராறில் பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய இலங்கை எம்.பி. இலங்கை யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அருச்சுனா பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், எம்.பி. அருச்சுனா இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்று அந்த நிலத்தைச் சுத்தம் செய்யும் பணியில் எம்.பி. ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த பெண்கள் நில உரிமை கோரி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த எம்.பி. அருச்சுனா, பாதுகாப்புக்காகத் தமக்கு வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, எதிர் தரப்பு பெண்களை நோக்கி நீட்டி மிரட்டல் விடுத்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரே பெண்கள் மீது ஆயுதத்தைப் பயன்படுத்தி மிரட்டல் விடுத்த சம்பவம் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
