பாகிஸ்தானில் 2.0 படத்திற்கு பெரும் வரவேற்பு : 300 கோடி ரூபாய் வசூலை குவிக்க வாய்ப்பு

ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை செய்துள்ளது.
பாகிஸ்தானில் 2.0 படத்திற்கு பெரும் வரவேற்பு : 300 கோடி ரூபாய் வசூலை குவிக்க வாய்ப்பு
Published on

ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை செய்துள்ளது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 120 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தானில் 2.0 திரைப்படம் அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதலில் 25 திரையரங்கில் 2.0 திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை அடுத்து 75 திரையரங்குகளில் தற்போது படம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டே நாளில் 10 கோடி ரூபாய் வசூலையும், அமெரிக்காவில் 12 கோடி ரூபாய் வசூலையும் 2.0 திரைப்படம் குவித்துள்ளது. 2.0 திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் வார முடிவில் 300 கோடி ரூபாய் வசூலை 2.0 திரைப்படம் குவிக்க வாய்ப்பு உள்ளதாக திரைப்பட வணிக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com