விடுதலை புலிகளின் இறுதிக்கட்ட போரில் காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் - கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது, காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் என்று அதிபர் கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகளின் இறுதிக்கட்ட போரில் காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் - கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு
Published on

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. அதில், ஒரு லட்சம் பேர் பலியானதாக கருதப்படுகிறது. சுமார் 20 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச, அப்போது இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்தார். இந்நிலையில், இலங்கைக்கு வந்துள்ள ஐ.நா. உயர் அதிகாரி ஹனாஸ் சிங்கரிடம், கோட்டபய, இறுதிக்கட்ட போரின் போது

காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டதாக, அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

தேவையான விசாரணை முடிந்த பிறகு, காணாமல் போனவர்களுக்கான மரண சான்றிதழ் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் வாழ்க்கையை தொடர தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com