உலகமே கேட்ட கேள்வி... வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு - சந்தேகம் தீர்த்த சுபான்ஷு
விண்வெளிக்கு வந்துவிட்டால் தண்ணீரையும் குடிக்காமல் சாப்பிடதான் வேண்டும் என சிரித்தபடி விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பகிர்ந்த வீடியோ பலரை கவர்ந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த விண்வெளி வீரரும் குரூப் கேப்டனுமான சுபான்ஷூ ஷுக்லா, கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தான் விண்வெளி மையத்தில் இருந்தபோது, உணவருந்துவதும் தண்ணீர் குடிப்பதும் மிக சவாலானது என தெரிவித்துள்ள சுபான்ஷூ சுக்லா, விண்வெளியில் கவனமாக இல்லாவிட்டால், எளிதில் பிரச்சினை உருவாகிவிடும் எனவும் விளக்கம் அளித்தார். உணவை ஜீரணிக்க நமக்கு ஈர்ப்பு விசை அவசியமில்லை எனவும், 'பெரிஸ்டால்சிஸ் முறை ஈர்ப்பு விசை இல்லாமல் உணவை ஜீரணிக்க உதவும் எனவும் சுக்லா விளக்கியுள்ளார்.
Next Story
