புதினின் திடீர் அறிவிப்பு.. குறிக்கப்பட்ட தேதி, நேரம்- மொத்தமாக திரும்பிய உலகின் கண்கள்

x

உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்த நிலையில், முழுமையான மற்றும் நீடித்த போர் நிறுத்தத்திற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால், படுகொலைகள் தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் உக்ரைன் அதிபர் ஜென்ஸ்கி தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்க ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்த ரஷ்ய அதிபர் புதின், வரும் 15-ம் தேதி துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை புதினுக்காக காத்திருப்பதாகவும், இம்முறை ரஷ்யர்கள் சாக்குப்போக்கு கூற மாட்டார்கள் என்று நம்புவதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்