Putin | Trump | Russia | டான்பாஸ் யாருக்கு..? டிரம்ப்-க்கு காத்திருக்கும் புதினின் மெசேஜ்
4 ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக அபுதாபியில் அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அடுத்த 2 நாட்கள் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில் டான்பாஸ் விவகாரம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் டான்பாஸ் பகுதி முழுவதையும் உக்ரைன் விட்டுக் கொடுத்தால் தான் போரை நிறுத்துவோம் என ரஷ்யா கூறிவரும் நிலையில், டான்பாஸை விட்டுக் கொடுக்க உக்ரைன் மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதோடு, அமைதி பேச்சுவார்த்தை எட்டப்பட்ட பிறகும்
எதிர்காலத்தில் ரஷ்யா மீண்டும் தங்களை தாக்காமல் இருக்க, அமெரிக்காவிடம் உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதம் கேட்டுள்ளது.
Next Story
