Putin | India US Deal | இந்தியா, US இடையே என்ன நடக்கிறது? - நடுவில் புகுந்து மைண்ட் கேம் ஆடும் ரஷ்யா

இந்தியா, US இடையே என்ன நடக்கிறது?

ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என ரஷ்யா தகவல் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியாவிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தங்களுக்கு வரவில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுடன் செய்யப்பட்ட புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு பதிலாக அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கான சுங்க வரியை 50% இலிருந்து 18% ஆக குறைத்ததாகவும் அறிவித்திருந்தார். ஆனால் இதுகுறித்து இந்தியா எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி தெரிவித்துள்ளார்... இந்தியாவுடன் உள்ள கூட்டுறவை ரஷ்யா தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும், இந்தியாவுடனான உறவுகள் முக்கியமானவை எனவும் அவர் தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com