America Protest | அமெரிக்காவை அதிரவைத்த போராட்டங்கள் - களத்தில் பத்திரிகையாளருக்கு நேர்ந்த கதி..
அமெரிக்காவை அதிரவைத்த போராட்டங்கள் - களத்தில் பத்திரிகையாளருக்கு நேர்ந்த கதி..
தொடர் வன்முறை - செய்தியாளர் மீது துப்பாக்கிச்சூடு - பதற்றம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்கள் தொடர்கின்றன. குடியேற்ற அதிகாரிகளை கண்டித்து லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 3வது நாளாக நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் போராட்டக்காரர்களை அமைதியாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார். சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி வரும் நிலையில், அனைவரும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தி வரும் காவல்துறையினர், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளனர். இதனிடையே, போராட்டத்தின்போது கார்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது...
இதனிடையே, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செய்தியாளர் செய்தி சேகரிக்கும்போது, ரப்பர் குண்டுகளால் சுடப்பட்ட காட்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நற்வாய்ப்பாக செய்தியாளரும், கேமரா மேனும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.