சுதந்திர நாளில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்... பரபரப்பு காட்சி

x

பெரு நாட்டில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது, அரசுக்கு எதிரான போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அந்நாட்டில் கடந்த 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உறவினர்களும், கல்லூரி மாணவர்களும், பெரு நகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றும் அதிபர் டினா பொலுவர்த்தேவை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கண்ணீர் புகை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்ததால் அந்த இடமே போர்க்களம்போல் மாறியது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்ததாக பெரு நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்