Protest | போக போக வலுக்கும் போராட்டம்.. வெடித்த மோதல் - கண்ணீர் புகை குண்டு வீசிய போலீஸ்

x

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள ஈக்வடார் நாட்டில், டீசல் மானிய விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

கனரக போக்குவரத்து, பயணிகள் வாகனம் மற்றும் விவசாயத் துறைகளால் பயன்படுத்தப்படும் சுமார் 1 பில்லியன் டாலர் டீசல் மானியத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்ததால் டீசல் விலை உயர்ந்துள்ளதாகக்கூறி, போராட்டம் நடைபெற்றது. தலைநகர் குயிட்டோவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மோதல் வெடித்தது. அப்போது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்