பொருளாதார தேக்க நிலையால் லெபனான் பிரதமர் பதவி விலகிய நிலையில், நேற்று புதிய பிரதமராக ஹசன் டயப் பதவியேற்றுள்ளார். ஆனால் போராட்டக்காரர்கள் இந்த நடவடிக்கையால் திருப்தி அடையாமல், நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலவர தடுப்பு போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். பதிலுக்கு போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.