

இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜின் 8வது பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் - கேத்தரீன் தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி மூத்த மகனாகப் பிறந்த, பிரிட்டிஷ் இளவரசர் ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ், அரியணை வரிசையில் 3ம் இடத்தில் உள்ளார். இன்று அவர் தனது 8வது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அதற்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஜார்ஜ் பிறந்த தருணம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது என்று இளவரசர் வில்லியம் கூறியது குறிப்பிடத்தக்கது.