அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடி | கட்டியணைத்து வரவேற்ற அதிபர்

x

அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அர்ஜென்டினா தலைநகர் பியுனோஸ் அயர்ஸ் (Buenos Aires) நகரில் உள்ள விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், அர்ஜென்டினா வாழ் இந்தியர்கள் தேசியக்கொடி ஏந்தியும், மோடி மோடி என்று முழக்கமிட்டும் உற்சாகமடைந்தனர். இந்தியர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, சிறுவர்களை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். அப்போது, பிரதமர் மோடியை பரதம் ஆடி இந்தியர்கள் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்புடன் மரியாதை அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலாய் (Javier Milei ) கட்டியணைத்து வரவேற்றார்.

பின்னர் இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.


Next Story

மேலும் செய்திகள்