Modi | Merz | காரில் ஒளிந்திருக்கும் `ராஜதந்திர’ ரகசியம் - உலகுக்கே மறைமுக செய்தி சொல்லும் `இந்தியா’

x

சமீப காலமாக பிரதமர் மோடியுடன் ஒரே காரில் பயணிக்கும் தலைவர்களின் அணுகுமுறை உலக அரசியலில் தனி கவனம் பெற்று வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் ஒரே காரில் பயணித்தது உலகின் கவனத்தை ஈர்த்தது...

தொடர்ந்து அக்டோபரில் இந்தியா வருகை தந்திருந்த இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் பிரதமர் மோடி மும்பையில் ஒரே காரில் பயணித்திருந்தனர்...

டிசம்பர் மாத தொடக்கத்தில் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த ரஷ்ய அதிபர் புதினை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி, ஒரே காரில் தனது இல்லம் வரை பயணித்தார்...

ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிகளாக ஜோர்டான் நாட்டின் பட்டத்து இளவரசர் இரண்டாம் அல்-ஹுசைன் பின் அப்துல்லாவும் மற்றும் எத்தியோப்பியா பிரதமர் அபிய் அகமது அலியும் மாறிய நிகழ்வு உலக அரசியலில் கவனம் ஈர்த்தது...

தற்போது இந்தியா வருகை தந்துள்ள ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரதமர் மோடி ஒரே காரில் பயணித்து... இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் செய்தியை உலகிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்..."


Next Story

மேலும் செய்திகள்