விமான விபத்து முதற்கட்ட அறிக்கை - போயிங் நிறுவன தலைவர் பரபரப்பு கருத்து
ஏர் இந்தியா விமான விபத்தின் முதற்கட்ட அறிக்கையில் சில தகவல் தெளிவுபடுத்தப்படவில்லை என போயிங் நிறுவனத் தலைவர் கெலி ஆர்ட்பெர்க் Kelly Ortberg தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி எக்கனாமிக்ஸ் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கேபின் பதிவு சாதனத்தில், ஒரு பைலட் “ஏன் எரிபொருளை நிறுத்தினாய்? என கேட்டதும், மற்றொருவர் “தான் நிறுத்தவில்லை என பதிலளித்ததும் பதிவானதாக விசாரணை அறிக்கை குறிப்பிட்டதை போயிங் நிறுவனத் தலைவர் கெலி ஆர்ட்பெர்க் சுட்டிக்காட்டியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எந்த பைலட் இந்த வார்த்தைகளை உச்சரித்தார் என்பது தெரியவில்லை.... மேலும் மேடே என கூறியவர் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கெலி ஆர்ட்பெர்க் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எரிபொருள் சுவிட்ச் எதனால் தானாக மாறியது என்பதை முதற்கட்ட அறிக்கை தெளிவுபடுத்தவில்லை என்றும் போயிங் நிறுவனத் தலைவர் கெலி ஆர்ட்பெர்க் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
