"பிரபாகரனின் மனைவி, மகள் உயிருடன் இருக்கிறார்கள்"...மதிவதனியின் சகோதரி வீடியோ வெளியீடு...

"பிரபாகரனின் மனைவி, மகள் உயிருடன் இருக்கிறார்கள்"...மதிவதனியின் சகோதரி வீடியோ வெளியீடு...
Published on

"பிரபாகரனின் மனைவி, மகள் உயிருடன் இருக்கிறார்கள்"

மதிவதனியின் சகோதரி வீடியோ வெளியீடு

"இருவரையும் சந்தித்து அவர்களுடன் சாப்பிட்டேன்"

"இதனை கடவுள் அளித்த வரமாக பார்க்கிறேன்"

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது...

இது தொடர்பாக டென்மார்க்கில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி வெளியிட்டுள்ள காணொளியில், இருவரையும் அண்மையில் சந்தித்ததாகவும், அவர்களுடன் உணவு உண்டதாகவும் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின்போது இருவரும் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அவர்கள் தற்போது உயிருடன் இருப்பதை அறிந்து சந்தித்து வந்ததாக கூறியுள்ளார். இது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், இதனை கடவுள் அளித்த வரமாக பார்ப்பதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com