Taiwan Earthquake | திடீரென குலுங்கிய கட்டிடங்கள்.. குழந்தையை தூக்கி கொண்டு அலறி ஓடிய தாய் - பதறவைக்கும் வீடியோ

x

தைவானின் யிலான் கவுன்டியில் Yilan county ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவில் 7-ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் தைபேயில், நிலநடுக்கத்தின்போது ஒரு வீட்டின் அறையில் இருந்த விளக்குகள் அசைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. நில நடுக்கத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தைவானின் சில பகுதிகளில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இதனிடையே, தைபேயில் உள்ள வீட்டில் நிலநடுக்கத்தின் போது தங்க மீன்கள் இருந்த மீன் தொட்டி ஒன்று அதிர்ந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதேபோல், நில நடுக்கத்தின்போது ஒரு வீட்டில் இருந்த கட்டில் வேகமாக அசைந்த நிலையில், அதில் தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை அதன் தாய் அவசரமாக அறையில் இருந்து வெளியே தூக்கிச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்