சக்திவாய்ந்த செங்கடலில் அக்னி பிரளயம் - பதற்றத்தில் உலக நாடுகள்
ஏமன் கடற்பகுதியில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், கப்பல் ஒன்றை வெடி வைத்து தகர்க்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
காசாவில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், செங்கடல் பகுதியில் வர்த்தக கப்பல்களை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏமனின் தென்மேற்கு கடல் பகுதியில் லைபீரிய கொடியுடன் வந்த கப்பலை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வெடி வைத்து தகர்த்தனர்.
அந்த கப்பலில் இருந்த அனைவரும் அந்த வழியாக வந்த மற்றொரு கப்பலில் இருந்து வந்தவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Next Story
