பொட்டாலா அரண்மனை-பராமரிப்பு பணிகள் தீவிரம்
திபெத்ல இருக்க பொட்டாலா அரண்மனை பத்தி கேள்விப் பட்டுருப்பீங்க...12 ஆயிரம் அடி உயரத்துல...லகாசா பள்ளத்தாக்குக்கு மத்தில...இந்த அழகான அரண்மனை கட்டப்பட்டுருக்கு...குறிப்பா தலாய்லாமாக்களோட சன்னதிகள் இங்க தான் அமைஞ்சுருக்கு...அழகழகான ஓவியங்கள்...அம்சமான வேலைப்பாடுகள்...வாய் பிளக்க வைக்குற சிற்பங்கள்...இந்த அரண்மனை முழுக்க நிறைஞ்சுருக்கு...
7ஆம் நூற்றாண்டுல கட்டப்பட்ட பொட்டாலா அரண்மனை, திபெத்திய வரலாறு, கலாச்சாரம், கலையோட ஒரு கலங்கரை விளக்கம்னே சொல்லலாம்...இங்க பல மொழிகள்ல கிட்டத்தட்ட 40,000 பழமையான புத்தகங்கள், முக்கிய ஆவணங்களோட தொகுப்புகள்லாம் பாதுகாக்கப்படுது...
இந்த பொட்டாலா அரண்மனை கிட்டத்தட்ட ஒரு உலக அதிசயமாத்தான் பார்க்கப்படுது...இது உலக பாரம்பரிய சின்னங்கள்ல ஒன்னு...தலாய்லாமாவோட சிம்மாசனத்த சிங்க சிம்மாசனம்னு சொல்லுவோம்...அந்த சிங்க சிம்மாசனமும் இந்த பொட்டாலா அரண்மனைல தான் இருக்கு...
இந்த அதிசயத்த பாதுகாக்குறத கண்ணும் கருத்துமா செஞ்சுட்டு இருக்காங்க இந்த ஊர் மக்கள்...கவரிமா-னு சொல்லுவோமே...இமயமலைல வாழக்கூடிய ஒரு வகை மாட்டினம்...அதோட பால்...அப்றம் வெள்ளை சுண்ணாம்பு, பால், சர்க்கரை, தேன் மற்றும் குங்குமப்பூ உள்பட முக்கியமான பொருட்கள கலக்குற 300 ஆண்டுகள் பழமையான செய்முறைய பயன்படுத்தி இந்த அரண்மனைக்கு வண்ணம் தீட்டுறாங்க...
இதுல ஸ்பெஷலான விஷயமே...ஊர் மக்கள் ஒன்னு சேர்ந்து இந்த கோவில பராமரிக்குறது தான்...நீ செய்...நான் செய்றேன்னு போட்டி போட்டு வேலைய இழுத்து போட்டு செய்றாங்க..யார் முகத்துலயாவது சோர்வு தெரியுதான்னு பாருங்க...
நம்ம வீட்டு விசேஷம்னா...வீட்டுக்கு வெள்ளை அடிப்போம்ல...அப்டிதான் இந்த அரண்மனைக்கும் வெள்ளையடிக்க ஆர்வமா வேலை செய்றாங்க உள்ளூர் மக்கள்...திபெத்திய புத்த விழாவுக்கு முன்னாடி இந்த வேலைகளேலாம் முடிக்கணும்...அரண்மனைக்கு மாதிரியே தங்களோட வீடுகளுக்கும் வெள்ளையடிச்சு விழாவுக்கு தயாராகிட்டு இருக்காங்க மக்கள்...

