

ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உலக கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ், டோக்கியோவில், அந்நாட்டு மன்னர் NARUHITO - வை சந்தித்தார். அப்போது, உலகில் அமைதி நிலவ எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். முன்னதாக, ஹிரோஷிமா அணு குண்டு வீச்சில் பாதிக்கப்பட்டோர்களை சந்தித்து பேசிய போப்பாண்டவர், அணு ஆயுதங்களை ஒழிக்க முன்வருமாறு, உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.