தீபாவளியை முன்னிட்டு போப் பிரான்சிஸ் தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார். வரும் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வாடிகனில் போப் ஆண்டவர் நிர்வாகம் சார்பில் மதங்களுக்கு இடையேயான ஒற்றுமையை வலியுறுத்தும் வாசகங்களுடன் வாழ்த்து செய்தியை வெளியிடப்பட்டது. அதன் படி, தீபாவளியைக் கொண்டாடி, எதிர்காலத்துக்கான நம்பிக்கையுடன் வாழ்க்கையை, வீடுகளை, சமூகத்தை ஒளிரச் செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சவாலான தருணங்களில், கிறிஸ்தவர்களும், இந்துக்களும் மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்ற முடியும் என்றும், மதங்களுக்கு இடையேயான ஒற்றுமையின் மூலம் மக்களின் வாழ்வில் ஒளியை ஏற்றுவது, சமூகத்தில் மத மரபுகளின் பயன் மற்றும் வளத்தை உறுதிப்படுத்துவதாகவும் போப் தெரிவித்துள்ளார்.