PoK Riots | வெடித்த கலவரம்.. பற்றியெரியும் PoK.. கொத்து கொத்தாக மரணம் - ஒரு கண் வைக்கும் இந்தியா

x

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை - 12 பேர் பலி.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 12 சட்டப் பேரவைத் தொகுதிகளை ரத்து செய்வது, வரி விலக்கு, மின்சார மானியம் உள்ளிட்ட 38 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திடீரென வன்முறை ஏற்பட்டதால், பொதுமக்களை நோக்கி பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.மேலும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, முசாபராபாத் ஆற்றுப் பாலத்தில் ஏறிய போராட்டக்காரர்கள், கன்டெய்னரை ஆற்றில் தூக்கி போட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்