PM Modi | ``உங்கள நான் காப்பி அடிச்சிருக்கேன்’’ -PM மோடி முகத்திற்கு நேராக ஒப்புக்கொண்ட IDN அதிபர்
இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை காப்பியடித்துள்ளதாக இந்தோனேசிய அதிபர் கூறியுள்ளார்... இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களை பாராட்டிய இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, இந்திய கலாச்சாரம் இந்தோனேசியாவில் ஏற்படுத்தியுள்ள ஆழமான தாக்கங்கள் குறித்தும் நெகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியப் பிரதமர் மோடியின் இந்தோனேசியப் பயணத்தை ஒட்டி, அந்நாட்டு அதிபர் மாளிகையில் நடந்த மதிய விருத்தின் போது பேசிய இந்தோனேசிய அதிபர் பிரதமர் மோடியின் நிர்வாகத் திறனைப் வெகுவாகப் பாராட்டினார் மேலும், அவர் பிரதமர் மோடி அரசின் பல திட்டங்களை தான் அப்படியே தனது நாட்டிலும் பின்பற்றி வருவதாகவும் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வரலாற்று மற்றும் கலாச்சாரப் பிணைப்பை சுட்டிக்காட்டிய அவர், இந்தோனேசிய பண்பாடு, வரலாறு மற்றும் அன்றாட வாழ்க்கை முறை ஆகியவை இந்திய நாகரிகத்தாலும், இந்து கலாச்சாரத்தாலும் பெருமளவில் ஈர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, இந்தோனேசிய மொழியில் உள்ள வார்த்தைகளில் குறைந்தது 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தவை என்றும், தங்களது நாட்டின் தேசிய சின்னமான 'கருடா' இந்திய மற்றும் இந்து புராணக் கதைகளில் இருந்து பெறப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பிரதமர் மோடியுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் மூலம் எட்டப்பட்ட அர்த்தமுள்ள முடிவுகளை இரு நாட்டு மக்களின் நன்மைகளுக்காக உறுதியான நற்பலன்களாக மாற்றுவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக கூறினார். முன்னதாக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இந்தோனேஷிய அதிபர் மாளிகை வளாகத்தில் குழந்தைகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
