PM Modi | "அமீரகம் எனது இரண்டாவது வீடு.." - உருக்கமாக நன்றி சொன்ன PM மோடி

PM Modi | "அமீரகம் எனது இரண்டாவது வீடு.." - உருக்கமாக நன்றி சொன்ன PM மோடி

PM Modi | "அமீரகம் எனது இரண்டாவது வீடு.." - உருக்கமாக நன்றி சொன்ன PM மோடி

மேற்காசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அபுதாபி பயணம் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. அமீரகத்தை தனது இரண்டாவது வீடு என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட பிரதமர், போர்ச் சூழலிலும் அங்குள்ள இந்தியர்களைக் கனிவோடு பாதுகாத்த அதிபருக்கு உருக்கமான நன்றிகளைத் தெரிவித்தார். அமீரகம் மீதான ஏவுகணைத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்த பிரதமர் மோடி, பிராந்திய அமைதியை நிலைநாட்ட இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளித்தார். மேலும், இரு நாடுகளுக்கு இடையே எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கையெழுத்தான ஒப்பந்தங்கள், இந்த போர் காலத்திலும் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன

X

Thanthi TV
www.thanthitv.com