PM Modi | இரு நாடுகளும் எடுத்த முக்கிய முடிவு -பிரஸ்மீட்டில் அடுக்கிய பிரதமர்

இரு நாடுகளும் எடுத்த முக்கிய முடிவு -பிரஸ்மீட்டில் அடுக்கிய பிரதமர்

PM Modi | இரு நாடுகளும் எடுத்த முக்கிய முடிவு -பிரஸ்மீட்டில் அடுக்கிய பிரதமர் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடோ அல்லது எந்தவித சமரசமோ கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அரசு முறை பயணமாக மலேசியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் இருதரப்பு உறவுகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார். புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும் மலேசியாவும் சிறப்பான உறவைப் பகிர்ந்து கொள்வதாகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள்தொகையை கொண்ட உலகின் 2வது பெரிய நாடாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புத் துறை, பயங்கரவாத எதிர்ப்பு, உளவுத்துறை பகிர்வு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம் என்றும் தெரிவித்தார். மலேசியாவில் இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம், சுற்றுலாவிற்கான இலவச இ-விசா மற்றும் மலேசியாவில் டிஜிட்டல் கட்டண செயலியான UPI ஐ செயல்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள், இருநாட்டு குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவும், மலேசியாவும் தமிழ் மொழியின் மீதான பகிரப்பட்ட அன்பினால் பிணைக்கப்பட்டுள்ளதாகவும், மலேசியாவில் வலுவான மற்றும் துடிப்பான தமிழ் இருப்பு கல்வி, ஊடகம் மற்றும் கலாச்சார வாழ்வில் தெளிவாகத் தெரிவதாகவும் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடோ, சமரசமோ இல்லை என்று இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com