PM Modi| வெள்ளி தட்டு முதல் பிரத்யேக பட்டு வரை.. சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ்.. திக்குமுக்காட வைத்த PM

வெள்ளி தட்டு முதல் பிரத்யேக பட்டு வரை.. சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ்.. திக்குமுக்காட வைத்த PM

வெள்ளி தட்டு முதல் பிரத்யேக பட்டு வரை.. சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ்.. திக்குமுக்காட வைத்த PM மோடி

இந்திய பிரதமர் மோடி, இந்தோனேசியாவிற்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் மற்றும் சபாநாயகருக்கு இந்தியாவின் பாரம்பரியமிக்க கலைப் பொருட்களைப் பரிசாக வழங்கியுள்ளார். ​இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவிற்கு, கைவினைஞர்களால் முற்றிலும் கையாலேயே செதுக்கப்பட்ட 'பாரம்பரிய வெள்ளி அலங்காரத் தட்டு' பரிசளிக்கப்பட்டது. இதில் அறிவு, வலிமை மற்றும் இரு நாடுகளின் வனவிலங்குப் பாதுகாப்பைக் குறிக்கும் யானைச் சின்னங்கள் செதுக்கப்பட்டிருந்தன. ​காஷ்மீரின் புகழ்பெற்ற 'பாப்பியர்-மஷே' (Papier-Mâché) எனப்படும் காகிதக் கூழ் கலையால் செய்யப்பட்ட கிண்ணமும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோவிற்கு பரிசாக பிரதமர் மோடி வழங்கியுள்ளார். பாரம்பரிய 'நகாஷி' முறையில், கையால் வரையப்பட்ட வண்ணமயமான பூக்கள், பறவைகள் மற்றும் தங்க வேலைப்பாடுகளுடன் கூடியது இந்த கலைப்படைப்பு...... ​உத்தரகாண்டின் குமாவோன் பிராந்தியத்தைச் சேர்ந்த பெண்களால் வரையப்படும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 'ஐபன்' (Aipan) நாட்டுப்புற ஓவியமும் அதிபருக்குப் பரிசளிக்கப்பட்டது. ​இந்தோனேசிய நாடாளுமன்ற சபாநாயகர் புவான் மகாராணிக்கு, ஒடிசாவின் பாரம்பரிய பெருமைமிக்க 'இகாத்' (Odisha Ikat) பட்டு ஆடை பரிசாக வழங்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com