4 நாட்கள் வானில் அதிசயம்.. ஒரே நேரத்தில் நடக்கும் `பரேடு’ - வெறும் கண்ணாலே பாக்கலாம்
சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றையொன்று சந்திக்கும் அபூா்வ நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படும். அதன்படி, வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய நிகழ்வு நடைபெறவுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா மையத்தில், இன்றுமுதல், வரும் 25ம் தேதி வரை பொதுமக்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 6 முதல் இரவு 8 மணி வரை தொலைநோக்கி மூலம் காண முடியும். வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் கிரகங்களை வீட்டின் மாடி, மைதானங்கள் அல்லது கடற்கரையில் இருந்தே பார்க்க முடியும் என்றும், யுரேனஸ், நெப்டியூனை சக்திவாய்ந்த தொலைநோக்கியால் மட்டுமே பார்க்க இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கோள்களின் அணிவகுப்பு மீண்டும் பிப்ரவரி 28 மற்றும் ஆகஸ்ட் 29ம் தேதி தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
