Planet Parade | பிப்.28-ல் சூரிய உதயத்திற்கு பின் நிகழ போகும் பிரபஞ்ச அதிசயம்

பிப்.28-ல் சூரிய உதயத்திற்கு பின் நிகழ போகும் பிரபஞ்ச அதிசயம்

பிப்.28-ல் சூரிய உதயத்திற்கு பின் நிகழ போகும் பிரபஞ்ச அதிசயம் - அதுல பியூட்டி என்னன்னா.. நாம வெறுங்கண்ணால பாக்கலாம் சூரிய உதயத்திற்கு பின் ஆறு கோள்கள் ஒரே நேரத்தில் தோற்றம் வானில் அரிய காட்சியாக, கோள்களின் அணிவகுப்பு வரும் 28ஆம் தேதி நிகழ உள்ளதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வின் போது புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் சூரிய உதயத்திற்கு பிறகு வானில் ஒரே நேரத்தில் தோன்றும். வானிலை சாதகமாக இருந்தால் புதன், வெள்ளி, வியாழன், சனி ஆகிய நான்கு கோள்களை வெறும் கண்ணால் காண முடியும். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களை தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலம் மட்டுமே பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com