திடீரென மாயமான விமானம் - 48 மணி நேரம் கழித்து வந்த தகவல்

x

பொலிவியா நாட்டில் 48 மணி நேரமாக மாயமான சிறிய ரக விமானத்தில் இருந்து குழந்தை உட்பட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். வடக்கு பொலிவியாவில் உள்ள பாரஸ் Baures என்ற இடத்தில் இருந்து ட்ரினிடாட் Trinidad பகுதிக்கு புறப்பட்ட விமானத்தில் 5 பேர் பயணித்தனர். விமானத்தின் எஞ்சினில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக, அமேசோனாஸ் ஆற்றங்கரை பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற மீட்புக்குழுவினர், விமானி உட்பட 5 பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்