Pink Diamond | உலக பொக்கிஷங்களின் ராணியான `பிங்க் வைரம்’ - கிறுகிறுக்க வைக்கும் விலை..
சோத்பீஸ் ஜெனீவா ஏலத்தில் 10 புள்ளி 08 காரட் இளஞ்சிவப்பு வைரம் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வைரம் அரியவகை குஷன்-கட் வைரம், 2023ல் அங்கோலாவில் வெட்டியெடுக்கப்பட்ட 21 காரட் கல்லிலிருந்து உருவாக்கப்பட்டது. நவம்பர் 12ம் தேதி நடைபெறும் ஏலத்தில், பிரிட்டிஷ் நீச்சல் வீராங்கனை மெர்சிடிஸ் க்ளீட்ஸே அணிந்த 1927 ரோலக்ஸ் தங்கக் கடிகாரம், நெப்போலியன் போனபார்ட் அணிந்த வைரத்தில் ஆன உடை ஊசி ஆகியவை இடம்பெறவுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஏலம், பழங்கால பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற நகை சேகரிப்பு ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
