

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வாங்குவதற்கு மாறாக , எண்ணெயை எடுத்த செல்ல வாடிக்கையாளர்களுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் பணம் தருகின்றனர். ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளுக்கு முடங்கியுள்ளதால் பெட்ரோலுக்கான தேவை குறைந்திருக்கிறது. அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு மைனஸ் 37.63 டாலராக உள்ளது.