பெரு நாட்டி​ல் கனமழை : வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

கடந்த வாரம் இறுதியில் பெரு நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் பல இடிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
பெரு நாட்டி​ல் கனமழை : வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
Published on
கடந்த வாரம் இறுதியில் பெரு நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் பல இடிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. இதுதவிர வாகனங்கள் மற்றும் பாலங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த கனமழையால் Huancabamba மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தில் சிக்கிய 300 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டு வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com