Peru Earth Quake | பயங்கர நிலநடுக்கம் - பீதியில் அலறி ஓடிய மக்கள்.. அதிர்ச்சி காட்சிகள்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில், சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் லிமாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனை நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது நிலநடுக்கம் ஏற்பட்டதால் அச்சமடைந்து அங்கிருந்து அவசரமாக வெளியே ஓடினர். இதனிடையே, நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் குலுங்கிய
சி.சி.டிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட நிலையில், மக்கள் அச்சத்துடன் சாலையில் தஞ்சமடைந்தனர். இதனிடையே, சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
