ஒலிம்பிக் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு
இத்தாலி முழுவதும் பயணித்து வரும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் படுவா நகரை சென்றடைந்தது...வெனெட்டோ மாகாணம் வழியாக நடைபெற்ற இந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டம், பழமையான பல்கலைக்கழகத்திற்கும், புகழ்பெற்ற ஓவியங்கள் உள்ள ஸ்க்ரோவெக்னி தேவாலயத்திற்கும் பெயர் பெற்ற படுவா நகரை வந்தடைந்ததும் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்...கடந்த மாதம் ரோம் நகரில் தொடங்கிய இந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டம், மொத்தம் 12,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து வரும் பிப்ரவரி 6 அன்று சான் சிரோ மைதானத்தில் நிறைவடைய உள்ளது.
Next Story
