கடுமையான குளிரால் இறக்கும் மக்கள்... படுக்கையறையில் இறக்கும் அவலம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான குளிரால் மக்கள் படுக்கையறையிலே உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடுமையான குளிரால் இறக்கும் மக்கள்... படுக்கையறையில் இறக்கும் அவலம்
Published on

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான குளிரால் மக்கள் படுக்கையறையிலே உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ், அக்லகாமா, ஒகியோ உள்பட பல மாநிலங்கள் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. கொட்டிக்கிடக்கும் பனிக்கு மத்தியில் மின்சாரம் மற்றும் குடிநீர் கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மின்சாரம் இல்லாததால் ஹீட்டர் செயல்படாமல் வயதானோர் வீட்டிலேயே உயிரிழந்த அவலமும் அரங்கேறியுள்ளது. வெதுவெதுப்பான சூழலுக்காக மக்கள் வீட்டில் சமையல் எரிவாய்வை பயன்படுத்திய போது கார்பன் மோனாக்சைடு வெளியேறியும் உயிரிழந்துள்ளனர். அங்கு பனிப்புயல் விபத்துக்களால் நேரிட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மக்களுக்கு இரண்டு வசதியையும் செய்துக்கொடுக்க காவல்துறை மற்றும் மீட்பு படையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com