கடலுக்குத் திரும்பிய மாகெல்லானிக் பென்குயின்கள்
அர்ஜென்டினாவில் பல வகையான பென்குயின்கள் காணப்படுகின்றன. அந்த வகையில், மாகெல்லானிக் பென்குயின்களும் இங்கு அதிகம் உள்ளன. இந்த வகை பென்குயின்கள் பெரும்பாலும் நீரில் வாழும் தன்மை கொண்டவை. இவை தங்கள் இனப்பெருக்கத்தை மீன்கள் அதிகமாக இருக்கும் இடம் அருகிலேயே மேற்கொள்கின்றன. இந்நிலையில், பியூனஸ் அயர்ஸ் கடற்கரைப் பகுதியில் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட 11 பென்குயின்கள் அறக்கட்டளை ஒன்றின் சார்பில் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. பென்குயின்களுக்கு சுமார் 2 மாதங்கள் போதிய ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பென்குயின்களை பள்ளி மாணவர்கள் முன்னிலையில் அறக்கட்டளை ஊழியர்கள் கடற்கரைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த பென்குயின்கள் கடலுக்குள் நீந்தத் தொடங்கின.
Next Story
