

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனே மீண்டும் வெற்றி பெறுவார் என முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் அவருக்கு சறுக்கல் ஏற்படும் என இறுதிகட்ட நிலவரம் வெளியாகி உள்ளது. மொத்தம் உள்ள 650 இடங்களில் அவருக்கு 339 இடங்கள் கிடைக்கும் என கூறி வந்த நிலையில் தற்போது 311 இடங்கள் வரை கிடைக்கலாம் என கூறப்படுகிறுது. இதுபோல எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 231 இடங்கள் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.