

கொரோனா பரவல் 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்க கூடும் என அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவை ஒழிப்பது கடினம் என்று தெரிவித்துள்ள பைசர் நிறுவனம், விரைவில் 2 முதல் 4 வயது குழந்தைகளுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த வகையான தடுப்பூசி தயாரிப்பின் போது, எதிர்ப்பார்த்த நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தடுப்பூசிக்கான அனுமதி பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.