9100 கார்களுடன் பனாமா கால்வாயை கடந்த மிகப்பெரிய கப்பல் - பிரம்மாண்ட காட்சிகள்

9100 கார்களுடன் பனாமா கால்வாயை கடந்த மிகப்பெரிய கப்பல் - பிரம்மாண்ட காட்சிகள்

உலகின் மிகப்பெரிய வாகனம் தாங்கி கப்பல், பனாமா கால்வாயை கடந்துள்ளது. ஹோக் அரோரா (Hoegh Aurora) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல், சுமார் 9 ஆயிரத்து100 கார்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த மிகப்பெரிய கப்பல், பனாமா கால்வாயை கடந்து ஒரு மைல்கல்லை எட்டியுள்ளதாக, பனாமா கால்வாய் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில், பனாமா கால்வாயின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகவும் கூறியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com