23 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய அதிபரை சந்திக்கவிருக்கும் பாக்.பிரதமர் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமா ரஷ்யா ?

ரஷ்ய ஊடகம் ஒன்று காஷ்மீரை மற்றொரு பாலஸ்தீனம் என குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், விரைவில் ரஷ்ய அதிபர் புதினுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திக்கவுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

ரஷ்ய ஊடகம் ஒன்று காஷ்மீரை மற்றொரு பாலஸ்தீனம் என குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், விரைவில் ரஷ்ய அதிபர் புதினுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திக்கவுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

பீஜிங் ஒலிம்பிக் தொடக்க விழாவில் ரஷ்ய அதிபர் புதினும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்து கொண்ட போதிலும், இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. ஆனால் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவரிடம் காஷ்மீர் நிலவரம் குறித்து பேசியது இந்தியாவின் கவனம் பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்த மாத இறுதிக்குள் ரஷ்ய அதிபர் புதின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மாஸ்கோ பயணிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக 1999 ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மாஸ்கோ பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் ஆட்சியாளர் ஒருவர் ரஷ்ய அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த வாரம் ரஷ்ய ஊடகம் ஒன்று தனது ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீரை மற்றொரு பாலஸ்தீனம் என குறிப்பிட்டு ஆவணப்படத்தின் ப்ரோமோ வெளியிட்டிருந்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதனை தனிப்பட்ட ஊடகத்தின் கருத்து என்றும், ரஷ்ய அரசுக்கும் அந்த ஆவணப்படத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் ரஷ்யா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருதரப்பு சம்பந்தப்பட்டது என்றும் அதில் தலையிட ரஷ்யா விரும்பவில்லை என்றும் ரஷ்ய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டிருப்பதால் இதே நிலை இம்ரான் கான் -புதின் சந்திப்பிற்கு பிறகும் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com