Pakistan Army Chief | ஆபரேஷன் சிந்தூர் கொடுத்த அடி.. அரசியல் சாசனத்திலேயே கைவைத்த பாகிஸ்தான்
பாக். ராணுவ தளபதி அசீம் முனீருக்காக செய்யப்பட்ட அதிரடி மாற்றம் பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீரின் பதவி நீட்டிப்புக்கு ஏற்றவாறு அரசியல் சாசனத்தின் 243வது பிரிவில் 27வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த பொறுப்பு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்றையும் கட்டுப்படுத்த வழிவகுக்கிறது. பிரதமரின் ஆலோசனைக்குப் பிறகு குடியரசுத் தலைவர் முனீரை அதிகாரப்பூர்வமாக நியமிப்பார். சமீபத்தில் ஆபரேஷன் சிந்தூரால் இந்தியாவிடம் பாகிஸ்தான் கடும் பின்னடைவை சந்தித்த நிலையில் அனைத்து படைகளையும் வழிநடத்த வலுவான தளபதி தேவை என்ற நோக்கின் அடிப்படையில் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. எனவே அசிம் முனீருக்கு நாட்டின் மிக உயர்ந்த இராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய மசோதாவை அரசாங்கம் மிக விரைவாக, சரியான விவாதம் இல்லாமல் நிறைவேற்றியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
