Pakistan | Aids | 200 சதவீதம் அதிகரித்த HIV.. பாகிஸ்தானையே நடுக்கவிட்ட அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தானில் எச்ஐவி பாதிப்பு 200 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 48,000 பேர் பாகிஸ்தானில் புதிதாக எச்ஐவி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது பாகிஸ்தானில் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பேர் எச்ஐவி பாதிப்புடன் வாழ்வதாகவும், அதில் 80 சதவீதம் பேர் தாங்கள் எச்ஐவி பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது குறித்து அறிந்திருக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
Next Story
